search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோகன் ஜி"

    • மோஜன் ஜி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
    • மோகன் ஜி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு

    ருத்ர தாண்டம், பகாசூரன் போன்ற திரைப்படங்களை இயக்கியவர் மோகன் ஜி. இவர் பல்வேறு விவகாரங்களில் சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து வந்துள்ளார். அந்த வகையில், பழனி பஞ்சாமிர்தம் பிரசாதத்தில் ஆண்மை குறைவு ஏற்படுத்தும் மருந்துகள் கலக்கப்படுவதாக மோஜன் ஜி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

    மேலும், சர்ச்சை கருத்து பதிவிட்டு வெளியிட்ட இயக்குநர் மோஜன் ஜி கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இவரது ஜாமின் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, இயக்குநர் மோகன் ஜி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    மேலும், எந்த ஒரு தகவலையும் தெரிவிக்கும் முன் அதனை உறுதிப்படுத்த வேண்டும். கருத்து தெரிவித்த சம்பந்தப்பட்ட சமூக வலைதளத்தில் மன்னிப்பு கேட்டு பதிவிட வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களில் மன்னிப்பு கேட்டு விளம்பரம் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

    • பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகள் சேர்க்கப்படுவதாக சர்ச்சை கருத்துகளை மோகன் ஜி தெரிவித்தார்.
    • மோகன் ஜியை சொந்த ஜாமினில் விடுவித்து திருச்சி கோர்ட்டு உத்தரவிட்டது.

    பராசூரன், திரவுபதி உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியவர் மோகன் ஜி. இவர் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பழனியில் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகள் சேர்க்கப்படுவதாக சர்ச்சை கருத்துகளை தெரிவித்தார்.

    இதனையடுத்து அவர் மீது திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் மேலாளர் கவியரசு கொடுத்த புகாரின் பேரில் நேற்று சென்னையில் இருந்த மோகன் ஜியை கைது செய்தனர். பின்னர் திருச்சி அழைத்து வந்து குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    பின்னர் அவரை சொந்த ஜாமினில் விடுவித்து கோர்ட்டு உத்தரவிட்டது. இதனிடையே மோகன் ஜி மீது பழனி அடிவாரம் போலீஸ் நிலையத்திலும் தேவஸ்தானம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் அடிவாரம் போலீசார் மோகன் ஜி மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    ஜாமினில் வெளியே வந்த மோகன் ஜி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதி லட்டுவில் கலப்படம் இருப்பதாக வெளிப்படையாக தெரிவித்தார். அவர் அவ்வாறு தெரிவித்த தைரியத்தில் தான் நான் பேசினேன். ஆந்திராவில் முதல்வரே இப்படி கூறும்போது, தமிழ்நாட்டில் இப்படி நடப்பதாக எனக்கு செவிவழி செய்தி கிடைத்ததே... இந்த மாதிரி இருக்கலாம் இருந்திருக்கலாம் ஒருவேளை இருந்தால் அதை சரி செய்திருக்கலாம் என்ற நோக்கத்தில் தான் பேசினேன். ஆனால் நான் கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

    எனக்கு ஆதரவளித்த ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மற்றும் பாஜகவை சேர்ந்த எச். ராஜா, வானதி ஸ்ரீனிவாசன் , இயக்குனர் பேரரசு ஆகியோருக்கு நன்றி" என்று அவர் தெரிவித்தார்.

    • அடிவாரம் போலீசார் மோகன் ஜி மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    • பழனி கோவில் பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு கருத்துகள் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேவஸ்தானம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    பழனி:

    பராசூரன், திரவுபதி உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியவர் மோகன் ஜி. இவர் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பழனியில் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகள் சேர்க்கப்படுவதாக சர்ச்சை கருத்துகளை தெரிவித்தார்.

    இதனையடுத்து அவர் மீது திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் மேலாளர் கவியரசு கொடுத்த புகாரின் பேரில் நேற்று சென்னையில் இருந்த மோகன் ஜியை கைது செய்தனர். பின்னர் திருச்சி அழைத்து வந்து குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    பின்னர் அவரை சொந்த ஜாமினில் விடுவித்து கோர்ட்டு உத்தரவிட்டது. இதனிடையே மோகன் ஜி மீது பழனி அடிவாரம் போலீஸ் நிலையத்திலும் தேவஸ்தானம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

    அதன் பேரில் அடிவாரம் போலீசார் மோகன் ஜி மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே பழனி பஞ்சாமிர்தம், திருப்பதி லட்டு குறித்து சர்ச்சையான கருத்துகளை பரப்பிய கோவையைச் சேர்ந்த பா.ஜ.க. தொழில் பிரிவு மாவட்ட துணைத் தலைவர் செல்வக்குமார், மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் ஆகியோர் மீது பழனி அடிவாரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில் மோகன் ஜி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே பழனி கோவில் பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு கருத்துகள் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேவஸ்தானம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • பழனி பஞ்சாமிர்தத்தில் ஆண்மை குறைவு மருந்துகள் கலப்பதாக சேர்ப்பதாக மோகன் ஜி பேசிய வீடியோ வைரலானது.
    • சென்னை காசிமேட்டில் இருக்கும் இல்லத்தில் வைத்து மோகன் ஜி இன்று காலை திருச்சி போலீசார் கைது செய்தனர்.

    பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதைத் தொடர்ந்து திரவுபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் பல்வேறு விவகாரங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வந்தார்.

    பழனி பஞ்சாமிர்தத்தில் ஆண்மை குறைவு மருந்துகள் கலப்பதாக சேர்ப்பதாக மோகன் ஜி பேசிய வீடியோ அண்மையில் இணையத்தில் வைரலானது.

    இதனையடுத்து சென்னை காசிமேட்டில் இருக்கும் இல்லத்தில் வைத்து மோகன் ஜி இன்று காலை திருச்சி போலீசார் கைது செய்தனர். மோகன் ஜி மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில், இயக்குநர் மோகன் ஜியை நீதிமன்ற ஜாமினில் விடுவித்து திருச்சி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    மோகன் ஜி கைதிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பழனி முருகன் கோயில் பஞ்சாமிர்தம் அழிக்கப்பட்டதன் பின்னணி குறித்த முழு விவரங்களை அரசு வெளியிட்டிருந்தால் இந்த சிக்கலே எழுந்திருக்காது.
    • தமிழக அரசு, கிளி ஜோசியர்களையும், சமூக ஊடகங்களில் பேசுபவர்களையும் கைது செய்து வீரத்தைக் காட்டக்கூடாது.

    சென்னை:

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஜி.மோகன் எந்தவித குற்றமும் செய்யாத நிலையில் சென்னை காசிமேட்டில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் எதற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார் என்பதை காவல்துறை இதுவரை தெரிவிக்கவில்லை. எந்த ஒரு வழக்கிலும் ஒருவரை கைது செய்வதற்கு உச்சநீதிமன்றம் பல்வேறு வழிமுறைகளை வகுத்திருக்கும் நிலையில், அவை எதையும் கடைபிடிக்காமல், ஒரு பயங்கரவாதியை பிடிப்பது போல மோகனை காவல்துறை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

    பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் பஞ்சாமிர்தம் சில வாரங்களுக்கு முன் பெருமளவில் அழிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, அது தொடர்பாக பல்வேறு தரப்பிலும் எழுப்பப்பட்ட ஐயங்களைத் தான் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். மேலும் இது தொடர்பான செய்திகள் பரவாமல் தடுக்கும் வகையில் அரசு விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தான் அவர் கூறியிருந்தார். இதில் எந்தத் தவறும் இல்லை. பழனி முருகன் கோயில் பஞ்சாமிர்தம் அழிக்கப்பட்டதன் பின்னணி குறித்த முழு விவரங்களை அரசு வெளியிட்டிருந்தால் இந்த சிக்கலே எழுந்திருக்காது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோயில் சிக்கல் தொடர்பாக சமயபுரம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அங்கிருந்து தனிப்படை காவலர்கள் விரைந்து வந்து மோகனை கைது செய்திருப்பதன் பின்னணியில் திட்டமிட்டு பின்னப்பட்ட சதிவலை இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பவர்களை கைது செய்யாத தமிழக அரசு, கிளி ஜோசியர்களையும், சமூக ஊடகங்களில் பேசுபவர்களையும் கைது செய்து வீரத்தைக் காட்டக்கூடாது. இயக்குனர் மோகனை அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    • இயக்குனர் மோகன் அளித்த நேர்காணலை பார்த்தவர்களுக்கு அவர் எந்த தவறும் செய்யவில்லை என்பது தெளிவாகத் தெரியும்.
    • அங்கொன்றும், இங்கொன்றுமாக வார்த்தைகளை புரிந்துகொண்டு மோகனை கைது செய்திருப்பது அநீதி.

    சென்னை:

    பாமக நிறுவனர் ராமதாஸ் தனது எக்ஸ் தள பதிவில்,

    தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற கோயில் ஒன்றின் பஞ்சாமிர்தம் குறித்து யூடியூப் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றுக்கு நேர்காணல் அளித்ததற்காக திரைப்பட இயக்குனர் ஜி.மோகன் கைது செய்யப்பட்டிருக்கிறார். அரைகுறை புரிதலுடன் திருச்சி மாவட்ட காவல்துறையினர் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

    இயக்குனர் மோகன் அளித்த நேர்காணலை பார்த்தவர்களுக்கு அவர் எந்த தவறும் செய்யவில்லை என்பது தெளிவாகத் தெரியும். யூடியூப் தொலைக்காட்சி அலைவரிசைக்கு அளித்த நேர்காணலில், ''புகழ்பெற்ற கோயில் ஒன்று தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்தத்தில் ஆண்மைக்குறைவு மாத்திரைகள் கலக்கப்பட்டதாகவும், பின்னர் அந்த பஞ்சாமிர்தம் தரமற்றது என்று கூறி அழிக்கப்பட்டதாகவும் செவிவழிச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கு என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை. அதனால் தான் நான் இதை செய்தியாளர் சந்திப்பைக் கூட்டி தெரிவிக்கவில்லை. காழ்ப்புணர்ச்சி காரணமாக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகக் கூட இவ்வாறு கூறப்பட்டிருக்கலாம். அரசும், அதிகாரிகளும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்று தான் கூறியிருக்கிறார்.

    இயக்குனர் மோகன் கூறியதில் எந்த தவறும் இல்லை. பொது நலன் கருதி கூறியதை முழுமையாக புரிந்து கொள்ளாமல், அங்கொன்றும், இங்கொன்றுமாக வார்த்தைகளை புரிந்துகொண்டு மோகனை கைது செய்திருப்பது அநீதி. அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    • மோகன் ஜி பழனி பஞ்சாமிர்தம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தினை கூறியதாக தெரிகிறது.
    • திருச்சியில் இருந்து சென்ற தனிப்படை போலீசார் மோகன் ஜியை கைது செய்ததாக தெரிகிறது.

    பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதைத் தொடர்ந்து திரவுபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் பல்வேறு விவகாரங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வந்தார்.

    இந்த நிலையில் சமீபத்தில் மோகன் ஜி பழனி பஞ்சாமிர்தம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தினை கூறியதாக தெரிகிறது. மோகன் ஜி. பேசிய வீடியோ வைரலானது. இந்நிலையில் சென்னை காசிமேட்டில் இருக்கும் இல்லத்தில் வைத்து மோகன் ஜி இன்று காலை கைது செய்யப்பட்டார்.

    திருச்சியில் இருந்து சென்ற தனிப்படை போலீசார் மோகன் ஜியை கைது செய்ததாக தெரிகிறது. மோகன் ஜி கைது தொடர்பாக போலீஸ் தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில் தமிழக பா.ஜ.க. மாநில செயலாளர் அஸ்வத்தாமன், இயக்குனர் மோகன் ஜி தமிழக போலீசாரால், கைது செய்யப்பட்டுள்ளதாக தனது எக்ஸ் பக்கத்தில் தகவல் வெளியிட்டு இருக்கிறார்.

    ஏற்கனவே திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்திற்கு பயன்படுத்தப்படும் நெய்யில், மாட்டுக்கொழுப்பு உள்ளிட்டவை கலக்கப்பட்டதாக புகார் எழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில் பழனி பஞ்சாமிர்தம் தொடர்பான மோகன் ஜி வெளியிட்ட வீடியோ அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

    • விநாயகர் சதுர்த்திக்கு விஜய் வாழ்த்து சொல்லவில்லை.
    • விஜயும் தவறான பாதையில் செல்வது தான் வருத்தமாக உள்ளது.

    விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாமல் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதை பார்த்தால் விஜய் தவறான பாதையில் செல்கிறாரோ என்று வருத்தமாக உள்ளது என்று இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.

    இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய மோகன் ஜி. "நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல தலைவர் வேண்டும், அதுவும் இளைஞர்களுக்கு பிடித்தவர் அரசியலுக்கு வருவது நல்ல விஷயம் தான். ஆனால், விஜயும் தவறான பாதையில் செல்வது தான் வருத்தமாக உள்ளது. விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை. ஆனால், ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து சொன்னது வருத்தமாக உள்ளது.

    இந்துக்கள் பண்டிகையான விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொன்னால், அது இந்துக்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார் என்பது போல மாறிவிடும். ஏனெனில் மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவிற்கு ஆதரவு அளிப்பது போல, ஒரு தோற்றம் வந்துவிடும் என்பதால், இந்துவாக இருக்கும் பலரும் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்ல பயப்படுகிறார்கள். விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்வது என்பது வேறு, பாஜகவிற்கு ஆதரவு தெரிவிப்பது வேறு, இந்த இரண்டையும் ஒன்றாக பார்க்கும் மனநிலை முதலில் மாற வேண்டும்" என்று தெரிவித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 2020 ஆம் ஆண்டு திரௌபதி திரைப்படத்தை இயக்கினார்.
    • மோகன் ஜி அடுத்து இயக்கும் படத்தை குறித்து மோகன் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    2016 ஆம் ஆண்டு வெளியான பழைய வண்ணாரபேட்டை படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானாஇ மோகன் ஜி. அதைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு திரௌபதி திரைப்படத்தை இயக்கினார்.

    இப்படம் சர்ச்சைக்கு உரிய படமாக இருந்தாலும். திரைப்படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்று வெற்றிப் படமாக அமைந்தது.

    கடைசியாக செல்வராகவன் நடிப்பில் பகாசூரன் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

    இந்நிலையில் மோகன் ஜி அடுத்து இயக்கும் படத்தை குறித்து மோகன் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் இந்த ஆடி பெருக்கு நன்நாளை முன்னிட்டு புதிய அலுவலக பூஜையுடன் அடுத்த திரைப்படத்திற்கான வேலைகல் துவங்கியது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதும் போல உங்கள் அன்பையும் ஆதரவையும் எதிர்நோக்கி என்று பதிவிட்டுள்ளார்.

    இப்பதிவில் அவர் பகிர்ந்துள்ள புகைப்படத்தின் அவருடன் நடிகர் ரிச்சர்ட் ரிஷி இருக்கிறார். அடுத்து இயக்கும் படத்தில் இவர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கு முன் மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, திரௌபதி மற்றும் ருத்ர தாண்டவம் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரிச்சர்ட் ரிஷி இதற்கு முன் 2023 ஆம் ஆண்டு வெளியான சில நொடிகளில் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர்கள் பலர் தங்களால் இயன்ற உதவியை மக்களுக்கு செய்து வருகின்றனர்.
    • மக்கள் இயக்க நிர்வாகிகள் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இயன்ற உதவிகளை செய்ய கேட்டுக்கொள்கிறேன்.

    மிச்சாங் புயல் எதிரொலியால், சென்னை மாநகரமே வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் அதிக கனமழை பெய்துள்ளது. இதனால், வீட்டிற்குள் வெள்ள நீர் புகுந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு சில இடங்களில் தண்ணீர் வடிந்தாலும் பல இடங்களில் தண்ணீர் வடியாமல் தேங்கி நிற்கிறது.


    இதையடுத்து நடிகர்கள் பலர் தங்களால் இயன்ற உதவியை மக்களுக்கு செய்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் நடிகர் விஜய் "வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மீட்க உதவி கேட்டு இன்னமும் நிறைய குரல்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக வந்த வண்ணம் உள்ளன.

    இந்த வேளையில் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இயன்ற உதவிகளை செய்ய கேட்டுக்கொள்கிறேன்" என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.


    இந்நிலையில், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை பாராட்டி இயக்குனர் மோகன் ஜி தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "எண்ணூர் cpcl அருகே இந்த கொடுரம்.. இந்த oil நம் பார்வையில் படுவதால் தெரிகிறது.. ஆனால் இந்த மாதிரி நிலைமையை பயன்படுத்தி காற்றில் விஷவாயுக்களையும் கலந்து விட்டுள்ளனர்.. இந்த பக்கம் ஒரு முறை வந்து சுவாசித்து பார்த்தால் புரியும்.. வாழ்த்துகள் இந்த விஜய் மக்கள் இயக்க நண்பர்களுக்கு" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் அந்த பகுதியிலிருந்து மக்களை காப்பாற்றும் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.


    • வினய் பரத்வாஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சில நொடிகள்’.
    • இப்படம் நவம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    வினய் பரத்வாஜ் இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, புன்னகை பூ கீதா, யாஷிகா ஆனந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'சில நொடிகள்'. மிஸ்ட்ரி, சஸ்பென்ஸ், எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட இந்தப் படம் வரும் நவம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.


    இதில் கலந்து கொண்ட இயக்குனர் மோகன் ஜி, "என்னுடைய ஹீரோ ரிச்சார்ட் சாருடைய படத்தின் இசைவெளியீட்டு விழாவில் நான் கலந்து கொள்வது மகிழ்ச்சி. இதுபோன்ற விழா அவருக்கு நடக்க வேண்டும் அதில் நான் கலந்து கொள்ள வேண்டும் என நான் நீண்ட நாள் காத்திருந்தேன். கடினமான ஒரு சமயத்தில் நான் போய் அவரிடம் நின்றபோது எனக்கு உதவுவதற்காக படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.


    படம் ரிலீஸின் போதும் எதிர்பாராத சில பிரச்சினைகள் வந்தது. அப்போதும் நான் அவரிடம்தான் போனேன். எனக்கு எல்லாவிதத்திலும் பக்கபலமாக நின்றார். அப்படி உருவானதுதான் 'திரெளபதி'. அவர் இல்லை என்றால் 'திரெளபதி' இல்லை. இந்தப் படம் 18 கோடி ரூபாய் தமிழ்நாட்டில் வசூல் செய்தது. அதேபோல, அடுத்த படமான 'ருத்ரதாண்டவ'-ம் 13 கோடி ரூபாய் தமிழ்நாட்டில் வசூல் செய்தது. மூன்றாவது படம் ஒரு கேப் விட்டு பண்ணலாம் என்றார். அதனால்தான் செல்வா சாருடன் 'பகாசூரன்' செய்தேன். நானும் ரிச்சரட் சாரும் மூன்றாவது முறையாக இணைய இருக்கிறோம். அதுகுறித்தான அறிவிப்பு விரைவில் வரும்.


    சினிமாவில் நான் ஐந்து வருடம் பயணித்தது அவரால்தான். திடீரென இவர் யாஷிகாவுடன் ஃபோட்டோ போட்டதும், என்ன சாருக்கு கல்யாணமா? என நிறைய பேர் என்னிடமும் கேட்க ஆரம்பித்துவிட்டனர். அவரிடம் நான் கேட்டபோது, சிரித்தார். பின்புதான் படத்திற்கான புரோமோஷன் என புரிந்தது. ரிச்சார்ட் சாரை இது போல திரையில் ஸ்டைலிஷாகப் பார்ப்பது மகிழ்ச்சி. 24-ஆம் தேதி படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்" என்று பேசினார்.

    • மோகன் ஜி இயக்கத்தில் உருவான பகாசூரன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
    • இதைத்தொடர்ந்து தற்போது இவர் புதிய படம் இயக்குவதில் மும்முரம் காட்டி வருகிறார்.

    பழைய வண்ணாரப்பேட்டை, 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்களை இயக்கிய மோகன் ஜி இயக்கத்தில் உருவான திரைப்படம் 'பகாசூரன்'. இப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்திருந்தனர்.



    இந்த படத்திற்கு சாம்.சிஎஸ் இசையமைத்துள்ளார். 'பகாசூரன்' திரைப்படம் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத்தொடர்ந்து தற்போது இயக்குனர் மோகன் ஜி புதிய படம் இயக்குவதில் மும்முரம் காட்டி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகனாக ரிச்சர்ட் ரிஷி நடிக்கவுள்ளதாக இவர் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.


    கங்கை கொண்ட சோழபுரத்தில் மோகன் ஜி

    இந்நிலையில், இயக்குனர் மோகன் ஜி அரியலூர், கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள கோவிலுக்கு தன் மனைவியுடன் சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


    ×